Home #Bosslady நீங்கள் முதலாளி பெண்மணியாக மாறவேண்டிய நேரம் இது.

நீங்கள் முதலாளி பெண்மணியாக மாறவேண்டிய நேரம் இது.

by LADY.LK
Lady Boss

உங்களிடம் சிறந்த எழுத்து திறன் இருக்கிறதா? உங்களால் ஒரு ருசியான கேக் செய்ய முடியுமா? உங்கள் பெண்கள் அணியின் பேஷன்-குருவா நீங்கள்? இந்த திறன்களை நீங்கள் பணமாக மாற்ற வேண்டிய நேரம் இது. பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிறப்பு மாதத்தில்,உங்கள் சொந்த, பிடித்த தொழிலை எவ்வாறு லாபகரமாக நடத்துவது என்பது பற்றி நாம் பேசலாம். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும், எந்த நேரத்திலும் ஒரு முதலாளியாக  மாற இந்த படிகளைப் பின்பற்றுங்கள்!

01.தொடக்கத்தில் இருந்து ஆரம்பியுங்கள். .

நீங்கள் விருப்பத்தோடு செய்யும் எந்த காரியமும் உங்கள் வெற்றிப்பாதையை தீர்மானிக்கும் என்பதை நீங்கள் அறிவார்களா? உங்கள் திறமைகளின் பட்டியலை ஒரு காகிதத்தில் உருவாக்கி, அவற்றை உங்கள் ஆர்வத்துடன் பொருத்துங்கள். உதாரணத்திற்கு

உன்னிடமிருந்து சிறந்த தாவரங்களை உருவாக்க முடியுமாயின் அவற்றை அழகிய சாடியில் வைத்து  எவ்வாறு விற்க ஆரம்பிக்கலாம் என்று சிந்தியுங்கள்.

02.சந்தை ஆராய்ச்சி

வணிகத் திட்டத்தில் சந்தை ஆராய்ச்சி கட்டாயமாகும். வியாபாரதிக்கான உண்மையான தேவை இருக்கிறதா? இல்லையா என்பதை உங்கள் நண்பர் நண்பிகளோடு யோசனை கேட்டுகொள்லுனால். உதாரணத்திற்கு  நீங்கள் சேலை ஜாக்கெட்டுகளை தைப்பதில் சிறந்தவராக இருந்தால், அதை வியாபாரம் செய்ய உங்கள் நண்பர்களோடு ஆலோசனை கேட்பதன் மூலம் அதனை கொண்டு  உங்களைச் வணிகத்தின் தெளிவான இலக்கினை அறிவது மட்டுமல்லாமல், சில வாய்ப்பு, ஆலோசனைகளை  பெற்றுக்கொள்ளலாம் .

03. எளிமையாகத் தொடங்குங்கள்.

ரோம் ஒரே இரவில் கட்டப்படவில்லை என்பதை நினைவில் கொள்லுங்கள். உங்கள் வணிக யோசனை எளிமையாக ஆரம்பித்து சரியான தருணத்தில் விரிவடைய வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் சிறு  தொடக்கங்களைக் கொண்டிருந்தன. உங்களின் தொழில் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை கொண்டு உங்களின் வாடிக்கையாளர்களை ஆதரவினை மற்றும் புதிய வடிக்கையாளரிகளை அதிகரித்துக்கொள்ள முடியும்.

04. மிகச்சிறந்த தேர்வு.

வாடிக்கையாளர்களை அடைய நீங்கள் பயன்படுத்தும் வழியில் உங்கள் வணிகத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். ஒரு எடுத்துக்காட்டுக்கு, இன்ஸ்டாகிராமில்  உங்கள் பெயரை புகைப்படக் கலைஞராக மாற்றுவதற்கான சிறந்த தளமாக இருக்கும், ஆனால் சிறப்பு முயற்சிகளுக்கு இது அதே முடிவைக் கைகொடுக்காது.

05. தனித்து நிற்கவும்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் கேட்க வேண்டிய கேள்வி “எனது செயட்பாடுகளை நான் எவ்வாறு தனித்துவமாக்குவது? மற்றவர்களிடம் இருந்து எம்மை எவ்வாறு வேறுபடுத்தி காட்டி கொள்ளவது என்று. உதாரணமாக நீங்கள் செய்யும்  வண்ணமயமான பேக்கேஜிங் அல்லது கையால் எழுதப்பட்ட அட்டை போன்றவற்றை கொண்டு நீங்கள் செய்யும்   பேக்கேஜிங் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்த்தி பெறமுடியும். லேடி டாக்ஸி ஓட்டுநர்களே!! தினசரி செய்தித்தாள் அல்லது புத்துணர்ச்சியூட்டும் பானம் போன்றவற்றினை உங்கள் டாக்ஸி வைத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வடிக்கையாளரிகளின்  தேவைகளை பூர்த்தி செய்ய கூடும்  அதுவே உங்களை தனித்து காட்டும்!

06. வணிக உறவை தக்கவைத்துக்கொள்வது.

ஒரு வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்வது அதன் தொடக்கத்தைப் போலவே முக்கியமானது, நீங்கள் ஒரு வீராங்கனை ஆயின் உங்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கவும், தொடரவும் புதிய உள்ளடக்கத்தை அவ்வப்போது பதிவேற்றுவது முக்கியமாகும்.

07. நல்ல பெயரை சம்பாதித்தல்.

ஒரு வாடிக்கையாளரைப் பெறுவதற்கு இது ஐந்து மடங்கு அதிக செலவு என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வணிகத்தைத் விரிவுபடுத்துவதற்கான மலிவான வழி என்னவென்றால் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் உங்களை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க அனுமதிப்பதாகும். ஒரு நல்ல உணவு வழங்குபவர் எப்போதுமே வாய் வழியாக தனது வியாபாரத்தினை விரிவு படுத்த முயட்சிப்பார். ஏன் என்றால் அது தன் வியாபாரத்தின் நட்பெயரை அதிகரிக்க செய்யும்.

08. முகாமைத்துவமும் மற்றும் நிர்வாகமும்.  

ஒரு நிர்வாகத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவிட்டால்- அதை நிர்வகிக்க முடியாது.  ஒரு எளிய பட்ஜெட், சரியான கணக்கும்  உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான அறிவு  உங்கள் நிர்வாகத்தினை மெம்மேலும் உயர்த்திட உதவும், மேலும் உங்கள் நிதி நிலைமை மற்றும் இலக்குகளை அறிய உதவும். மேலும் என்னவென்றால், இது சிறிய இழப்போ அல்லது பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயங்களை எடுப்பதிலிருந்தோ நீங்கள் விலகி இருக்க வைக்கும்.

இது எளிமையானது, அல்லவா! இப்போது இது உங்கள் சட்டை காலரை தூக்கிக்கொண்டு நீங்கள் ஒரு உங்கள் சொந்த முதலாளி பெண்மணியாக  மாறிடலாம் வாங்க!!

Related Articles