Home Parenting COVID-19 இன் போது சிறந்த புதிய-அம்மாவாக 5 வழிகள்.

COVID-19 இன் போது சிறந்த புதிய-அம்மாவாக 5 வழிகள்.

by LADY.LK
Care Baby

தாயக இருப்பது சவாலான காரியமே அதுவே இது முதல் குழந்தை என்றால் அது சுலபமல்ல. இந்த தொற்றுநோய் காலத்தில் ஒரு தாயக இருப்பது இருமடங்கு சவாலான காரியமே! நீங்கள் ஒரு குழந்தையின் தாயாயின், அக்குழந்தையை கவனிப்பதோடு அன்றாட வீட்டு வேலையையும் செய்வீராயின். இது உங்களுக்குரிய பதிவாகும். COVID-19 இன் போது உங்களுக்காக சவாலான நடவடிக்கைகளை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்த சில நிபுணத்துவ உதவிக்குறிப்புகளை இன்று நாங்கள் உங்களுக்குக் கொண்டு வர உள்ளோம்.

  1. முதலில் பாதுகாப்பு 

ஒரு கைகுழந்தையின் தாயான நீங்கள் இருவரும் அதிக ஆபத்தான சூழலில் இருக்கின்றீர்கள் என்று தெரியுமா உங்களுக்கு? எனவே நிலையான COID-19 பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றுவது மிக அவசியமான செயல் என்று  உங்களுக்கு தெரியுமா? வேலை, தேவையான உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்லுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் முகமூடி அணிவது, நெருக்கமான இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது மற்றும் கைகளை கழுவுவது கட்டாயமாகும். திரும்பி வந்ததும், உங்கள் குழந்தையை கையாளுவதற்கு முன்பு உங்கள் ஆடைகளை மாற்றிய பின் கையை சுத்தமாக கழுவுவது கட்டாயமாகும். அதன் பின் உங்கள் குழந்தையை கையாளுங்கள். மேலும், குளிர்சாதன பெட்டியில் முக்கியமான தொடர்பு எண்களின் பட்டியலை வைத்திருப்பது அவசரகால சூழ்நிலைகளில் உங்களுக்கு கைகுடுக்கலாம்.

02. தொடர்பாடலில் முக்கியத்துவம் 

நீங்கள் உங்கள் குழந்தையுடன் இருக்கும்போது, ​​மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறையை கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள், அவர்கள் மீது அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். நீங்களும் உங்கள் குழந்தையும் பேசி பழகி நல்ல பயனுள்ள இரு வழி தொடர்புகளை பேணுங்கள். அவர்களுடன் சேர்ந்து பாடுதல் மற்றும் சுட்டி தனமா விளையாட்டுகளை விளையாடுதல் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தி கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற தொடர்பினை குறைந்தபட்சமாக வைக்கப்பட வேண்டும், ஏனெனில் இது பார்வை மட்டுமல்ல, ஆரம்ப வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கிறது.

03. நேரத்தை நிர்வகித்தல் 

நீங்கள் வீட்டில் இருந்து அன்றாடவேலை செய்யும் தாயாக இருந்தால், உங்கள் சொந்த தினசரி பழக்கவழக்கத்தை மேம்படுத்துவது அல்லது பயனான வழிகளில் நேரத்திலனை செலவு செய்வது அவசியமாகும். தினசரி காலையில் உங்கள் நேர அட்டவணையை தயாரித்து  தினசரி நடவடிக்கைகளை எழுதுங்கள், அன்றய தின முடிவில் அதை செய்து முடித்திர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கல். இந்த பழக்கவழக்கம் இது நேரத்தை சரியானமுறையில் பயன்படுத்துதல் மற்றும் நேரவிரயத்தினை தடுக்கவும் இது உங்களுக்கு உதவும். தனிப்பட்ட கடமைகளின் உங்கள் உங்கள் பெற்றோரிடம்  முன்கூட்டியே உதவியை கேளுங்கள், இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்கை மற்றும்  குடும்பவாழ்க்கையை சமநிலை பேணலாம். 

04. உங்களைப் நீங்களே கவனித்துக்கொல்லுங்கள் 

நீங்கள் அம்மாவாக மாறிய பின் உங்கள் அணைத்து நடவடிக்கைலும் ஒரு மற்றம் உருவாகும். உங்களுக்காக நீங்கள் நேரத்தினை ஒதுக்கிகொள்ளுங்கள். ஏன் என்றால் உங்கள் சந்தோசம் உங்கள் பழக்கவழக்கங்களை நீங்களே கைவிடக்கூடாது என்றதால் நீங்களே உங்களுக்கான நேரத்தினை ஏற்படுத்திகொள்ள நினைவில் கொள்ளுங்கள்!

இந்த தொற்றுநோய் காலத்தில் பயம், கோபம் மற்றும் டென்சனயை உணர அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அதனால் நீங்கள் மன அழுத்தத்தை உணர கூடும். சின்ன சின்ன நிகழ்வில்  ஏற்படும் சந்தோசங்களை கொண்டாடும் பொது ஐஸ் கிரீம் உண்பது மூலமாகவோ நல்ல நல்ல ப்ரொக்ராம்ஸ்களை  டிவியில் பார்பதன்னலோ அல்லது உங்களுக்கு பிடித்த பாடலை கேட்பதனாலோ உங்களுக்கு எற்படும் மனநிம்மதி சந்தோசங்களை பெருக செய்யுங்கள். 


05. தொடர்பினை பேணுதல் 

 இந்த சவாலான காலங்களில் நீங்கள் எவ்வளவு தனிமைப்படுத்தப்பட்டாலும், நீங்கள் தனியாக இல்லை. உங்கள் மீது அக்கறை செலுத்தும் நபர்களுடன் இணைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குடும்பத்தினருடன் குரூப் கால் அமைக்கவும், உங்கள் சிறிய ஹீரோவின் சாதனைகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உங்கள் உச்ச நபர்களுடன் உங்கள் பிரச்சினைகளைத் சொல்லி கலந்துரை செய்து கொள்ளுங்கள்.

தொற்றுநோய் காரணமாக அதிக மன அழுத்தத்துடன் நீங்கள் இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை கடந்து வருகிறீர்கள், சில நேரங்களில் பயம், விரக்தி மற்றும் கோபத்தை உணருவது இயல்பாகும். எனினும் இந்த தொற்றுநோயை கண்டு அஞ்சாமல் நாம் இந்த தோற்று நோயினை ஒன்றாக நம் கைசேர்ந்து வென்றிடுவோம்.

 இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் குழந்தைக்குத் தேவையான சிறந்த அம்மாவாக மாற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அறிக்கையை உங்கள் நண்பரகளிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

Related Articles